April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

[Tamilwin]அமெரிக்காவை போல் மாறும் இங்கிலாந்து அரசு! வீதியில் இறங்கிய தமிழர்கள்

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச இனத்துவேசத்திற்கு எதிரான தினம் லண்டனில் தமிழ் மக்களினால் அனுஸ்டிக்கபட்டுள்ளது.

அன்றைய தினம் லண்டனில் (BBC) Portland Place,London W1A 1AA என்னும் இடத்தில் இனத்துவேசத்திற்கு எதிராகவும் அகதிகளின் உரிமைகளுக்காகவும் அணிவகுப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தப் பேரணி சனிக்கிழமை காலை 11.00 ஆரம்பமாகி லண்டனின் பலமுக்கிய பகுதிகளினுடாக சென்று பிரித்தானியாவில் பாராளுமன்ற சதுக்கத்தில் நிறைவுபெற்றது.

இந்த அணிவகுப்பை பல அமைப்புக்கள், பல யூனியன்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதுடன், அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டுள்ளது.

பிரித்தானியாவின் போராட்டங்களில் தமிழ் பேசும்மக்களும் இணைந்து கொண்ட தினமாக நேற்றைய தினம் அமைந்திருந்தது.

நாங்கள் அகதிகள், அகதிகளின் உரிமைகளுக்காக போராடுகிறோம் என்பதை பல்லின மக்களுக்கு தெரியப்படுதியதன் மூலம் அவர்களது முழு ஆதரவை திரட்டக்கூடியதாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

பல யூனியன்கள் இதில் பங்குபற்றி, பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் அகதிகளுக்கான உரிமைகள் அமைப்புக்கு முழு ஆதரவையும் வழங்கியுள்ளது.

அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பு இந்த போராட்டத்தில் முன்வைத்த கோரிக்கைகளாவன.

01 அகதிகளை நாடுகடத்துவதை நிறுத்து

02 அகதிகளுக்கு வேலைசெய்யும் உரிமையை வழங்கு

03பிரித்தானியாவின் அனைவருக்கும் ஊதியமாக மணிக்கு £10 வழங்கு

04அனைவருக்கும் இலவச மருத்துவ சேவையை வழங்கு, மருத்துவ சேவையை தனியார் மயப்படுத்தாதே..அகதிகள் மருத்துவ சேவைக்கு பணம்கோருவதை நிறுத்து.

05பிரித்தானியாவில் உள்ள அனைத்து தடுப்புமுகாம்களை மூடு.

போன்ற கோரிக்கைகளுடன் பல தமிழர்கள் துவேசத்துக்கு எதிரான நாளில் போராட்டத்தில் இறங்கி இருந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி அகதிகளுக்கு எதிரான துவேச பிரசாரம் செய்து வருவது உலகெங்கும் பல மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுதி உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அதேபோல் இங்கிலாந்து அரசும் அகதிகளுக்கு எதிரான சட்ட திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் அகதிகளும் மனிதரே என அனைத்து அகதிகள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தோடு தமிழ்பேசும் மக்களும் இணைந்து கொண்டது முக்கியமான விடயம் எனவும் கூறப்பட்டுள்ளது.

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *