March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

தொழிற்சங்க மயமாகும் அகதிகள் பிரச்சனைகள்

       தொழிற்சங்க மயமாகும் அகதிகள் பிரச்சனைகள்

 

அண்மையில் SKYNEWS எனப்படும் ஆங்கில ஊடகம் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோருபவர்கள் நிலையை படம்பிடித்து காட்டியது. உலகின் 6ஆவது பணக்கார நாட்டில் அகதி தஞ்சம் கோருவோர் சமூகத்தில்  ஒதுக்கப்பபடும் மனிதர்களாக நிலைமை மோசமடைந்து உள்ளது. தங்குமிட வசதிகள் , மருத்துவ உதவிகள் , சட்ட ஆலோசனை உதவிகள் ஏதும் சரிவர கிடைக்காமல் பலரின் நிலைமை இவ்வாறே உள்ளது.  வேலை செய்வதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு £15-£20 சட்டவிரோதமாக வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறானவர்களின் நிலையை  பயன்படுத்தி மிக குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆட்களை அமர்த்துவதன் மூலம் மிகப்பெரிய மனித வள சுரண்டல் நடந்தேறுகிறது.

 

இதற்கு வழிவகுக்கும் ரீதியாகவே இந்த கான்சவெர்ட்டிவ் அரசாங்கம் செயற்படுகிறது. இதன் மூலம் உள்ளூர் உழைக்கும் மக்களின் நேரடி எதிரிகள் இந்த குடிவரவாளர்களே என சித்தரிக்க முயல்கிறது இந்த முதலாளித்துவ அதிகார வர்க்கம்.  குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய நிறைந்த தொழிலாளர்களை வழங்க எதுவாக இருந்த ஐரோப்பியன் யூனியன் இல் இருந்து வெளியேற வேண்டும் என மக்கள் வாக்களித்தற்கு இதுவும் ஓர் காரணமாகும். பிரெக்ஸிட்டின் போது ஐரோப்பியர்களின் வரவு தடைபடுவதால் தொழிலாளார் பற்றாக்குறை நிலவும் பட்சத்தில் தமக்கு இந்த அரசாங்கத்தால் ஏதும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படலாம் என எண்ணுகிறார்கள் இந்த அகதி தஞ்ச கோரிக்கையாளர்கள்.

 

பெரும்பாலான ஐரோப்பா நாடுகள் அகதி கோரிக்கையாளர்களுக்கு வேலை செய்யும் அனுமதி வழங்கினாலும் பிரித்தானியா வருடக்கணக்காக வேலை செய்ய அனுமதிக்காமல் இருப்பதே பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. அகதிகள் உரிமைகள் அமைப்பு தொடங்க பட்ட போதே அமைப்பின் கோரிக்கைகளில்’ Allow right to work ‘ என்பது முக்கியமானதாக இருந்தது. ஏறக்குறைய ஒரு வருடங்கள் கடந்த நிலையில் இந்த பிரச்சனை நாடளாவிய ரீதியில் கவனம் பெற்றுள்ளது. பிரித்தானியாவில் தொழிலாளர் உரிமைகள் , உழைக்கும் மக்கள் பிரச்சனைகள் சார்ந்து இயங்கும் பல தொழிற்சங்கங்கள் அகதிகள் வேலை செய்யும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலைபாட்டுக்கு ஆதரவு அளிக்கின்றன.

 

இந்த நிலைப்பாட்டை தொழிற்சங்கங்களின் தேசிய கொள்கையாக

(National Policy) கொண்டு வருவதற்கான முதல் முயற்சியாக நவம்பர் 11 ஆம் திகதி தொழிற்சங்க பிரதிநிதிகளும் அகதிகள் உரிமைகள் அமைப்பும் இணைத்து நடாத்த உள்ளன. போராட்ட அம்மைபுகளும் , மனித உரிமை ஆர்வலர்களும் ஆகா 1500 மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் ‘மாதிரி தீர்மானம்’ (Model Resolution) நிறைவேற்ற படவுள்ளது. எமது உரிமைகளை பல்லின போராடும் சக்திகளோடு இணைந்து வென்றடுப்பதோடு நாம் எமது உரிமையோடு சுதந்திரமாக வாழ்வதற்கு உரிய சூழல் தாயகத்தில் இல்லை என்பதையும் ஆணித்தரமாக கூறும் தருணமிது. அகதிகள் உரிமைகள் அமைப்பால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்ச்சிக்கு ஆதரவு அளிக்க கலந்து கொண்டு உரிமைகளை உங்கள் குரலிலும் தெரிவியுங்கள்.

flair

 

Date    11th November

Time  3pm to 5pm

Venue  Institute of Education,

20 Bedford Way,

WC1H 0AL

https://goo.gl/maps/v1dKCAuTup72

“linking refugees’ struggle with the workers movement in Britain”

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *